வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா இல்லாமல் பல்வேறு தொடர்களில் நாம் தோல்வியை தழுவி இருக்கிறோம். டி20 உலக கோப்பை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா இல்லாததால் நாம் அரை இறுதிச்சுற்றில் தோற்க நேர்ந்தது. கடந்த முறை ஆசிக் கோப்பை போட்டியிலும் பும்ரா இல்லாமல் இந்திய அணி அடி வாங்கி விட்டு வந்தது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள பும்ரா தற்போது அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்படுகிறார். பும்ரா காயத்திலிருந்து திரும்பி உள்ளதால் அவரால் பழையபடி சரியாக பந்து வீச முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இதனால் அவர் மீது தேவையற்ற எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் என பலரும் கூறி வந்த நிலையில் அதனை சுக்கு நூறாக உடைத்து விட்டார் பும்ரா. என்றுமே நான்தான் யாக்கர்க்கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் பும்ரா.
பும்ரா தலைமையிலான இந்திய இளம் வீரர்கள் நேற்று அயர்லாந்து சென்று அடைந்தார்கள். இந்நிலையில் பும்ரா இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பும்ரா வீசிய இரண்டு பந்துகள் அவரின் பழைய ஸ்டைலை காட்டியது. முதல் பந்தை ஷார்ட் பாலாக பேட்ஸ்மேன் தலைக்கு குறி வைத்தார். அதனை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன் தடுமாறினர்.
இதனையடுத்து இரண்டாவது பந்தாக தன்னுடைய முத்திரையாக கருதப்படும் யாக்கர்களை வீசினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் வீரர்கள் தடுமாறினார் இந்த காணொளியை பிசிசிஐ தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஃபயர் விட்டு வருகிறார்கள்.
ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்புக்கு முன்பு பும்ரா இதே போன்று செயல்பட்டால் நிச்சயம் இந்திய அணியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய குறை நிவர்த்தி செய்யப்படும். மேலும் பும்ரா, ஷமி, சிராஜ் என மூன்று வீரர்களும் இணைந்தால் பந்துவீச்சில் நமக்கு எந்த சிக்கலுமே இருக்காது. இப்போது பிரச்சினை எல்லாம் இந்தியாவில் பேட்டிங் ஆக தான் இருக்கிறது.