ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் - சாம் கரண்!

Updated: Thu, May 16 2024 14:28 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சாம் கரண் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண்,  “இன்றைய போட்டியில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக பந்துவீசினோம். இப்போட்டியில் நாங்கள் விளையாடுவதற்கு நிறைய பெருமைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சீசனின் முதல் போட்டியிலேயே நாதன் எல்லிஸ் அபாரமாக பந்துவீசியது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் முன்பே அவரை பயன்படுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஜானி பேர்ஸ்டோவ் என்னிடம் மைதானம் விளையாடுவதற்கு கடினமாக இருந்தது என கூறினார். 

அதனால் நாங்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் ஒரு சில சிக்ஸர்களை அடித்தாலே வெற்றிபெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் நான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நாளை இங்கிலாந்து புறப்படுகிறோம். வெளிப்படையாக கூற வேண்டுமெனில் நாங்கள் இந்த சீசனை முழுமையாக அனுபவித்து விளையாடினோம். அதிலும் ஒருகேப்டனாக இந்த சீசனை நான் மழ்கிச்சியுடன் விளையேடினேன். எங்கள் அணியில் இருந்த சூழல் மிகவும் நன்றாக இருந்தது. எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை