IND vs AUS: மைதானட்தில் புகுந்து ஆட்டம் காட்டிய நாய்; இணையத்தில் வைரலாகும் காணொளி!

Updated: Wed, Mar 22 2023 20:54 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த போதும் 49 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 269 ரன்களை குவித்துவிட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் இது அதிகம் ஆகும்.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33, மிட்செல் மார்ஷ் 47 என சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இதன் பின்னர் வந்த அலெக்ஸ் கேரி 38 ரன்களும், மார்ன்ஸ் லபுசாக்னே 28 ரன்களையும் அடிக்க சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் இப்போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆட்டத்தின் 43ஆவது ஓவரின் போது குல்தீப் யாதவ் பவுலிங் வீச சீன் அப்போட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாய் ஒன்று அதிவேகமாக அங்கும் இங்குமாக ஓடியது. அதனை பிடிக்க மைதான ஊழியர்கள் நீண்ட நேரமாக பின் துரத்திக்கொண்டே சென்றனர். ஆனால் அவர்களால் நாயை பிடிக்கவே முடியவில்லை.

ஊழியர்களுக்கு உதவி செய்ய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் நாயை பிடிக்கும் பணியில் இறங்கினார். வழியை மறைத்துக்கொண்டு அவர் நின்ற போதும், சாதூர்யமாக செயல்பட்ட அந்த நாய், தப்பி ஓடிவிட்டது. இறுதியில் சுமார் 10 பேர் வரை நாயை துரத்தியும் அதனை பிடிக்க முடியாமல், மைதானத்தை 2 முறை சுற்றிவிட்டு தானாக வெளியேறிவிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. நாய் குறுக்கே வந்ததும் வீரர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணிக்கு 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடி வரும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை