பிபிஎல் 2022: பிரிஸ்பேனை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி தண்டர்!

Updated: Tue, Dec 27 2022 21:02 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரயண்ட்(1), ரென்ஷா(9), சாம் பில்லிங்ஸ்(1), ரோஸ் ஒயிட்லி(8), நெசெர்(0) ஆகிய வீரர்கள் சொதப்பினர். மந்தமாக பேட்டிங்  விளையாடிய காலின் முன்ரோ 47 பந்தில் 43 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சேவியர் பார்ட்லெட் 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி  121 ரன்கள் மட்டுமே அடித்தது. சிட்னி தண்டர் அணி தரப்பில் கிறிஸ் கிரீன், டேனியல் சாம்ஸ் ஆகியோரு தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, 122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேத்யூ கில்க்ஸ் ஆகிய இருவருமே அபாரமாக பேட்டிங் விளையாடி அரைசதம் அடித்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 36 பந்தில் 59 ரன்களும், கில்க்ஸ் 34 பந்தில் 56 ரன்களும் அடிக்க, 12ஆவது ஓவரிலேயே சிட்னி தண்டர் அணி இலக்கை எட்டியது.

இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை