இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!

Updated: Sun, May 09 2021 19:59 IST
Image Source: Google

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவும் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புவனேஸ்வர் குமார் சில வருடங்களாகவே அதிக அளவில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார். இதனால் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, “புவனேஸ்வர் குமார் எவ்வளவு சிறப்பாக பந்தை ஸ்விங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு ஒரு தூணாக நிற்பார். குறிப்பாக ஒரு பெரிய அணியை எதிர்கொள்ள  இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் ஒரு வீரராக இவர் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இறுதிப் போட்டியில் அவர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அதற்கு பின்னர் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவரை இந்திய அணி ஏன் புறக்கணித்தது என்று தெரியவில்லை.

மேலும் குல்தீப் யாதவ் இடம்பெறாதது தனக்கு மீண்டும் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடி உள்ளார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஐந்து விக்கெட் ஹால் எடுத்து அந்த போட்டியின் வெற்றிக்கு பங்களித்தார். இவர் நிச்சயமாக இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முதல் சுழற்பந்து வீச்சாளராக  களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு பின்னர் இவருக்கு எந்தவித வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

தற்பொழுது இறுதிப்போட்டியில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் இவரையும் இந்திய அணி புவனேஸ்வர் குமார் போல புறக்கணித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை