ஆசிய கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Mon, Aug 08 2022 19:34 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6ஆவது அணியாக ஆசிய கோப்பையில் விளையாடும்.

ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் பெரிய அணி என்பதை தீர்மானிக்கும் தொடர் என்பதால் முக்கியமான தொடர். இந்தியா, பாகிஸ்தான் இடையே தான் கடும் போட்டி நிலவும்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிறைய வீரர்களுக்கு இடையே அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுவதால், ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்துடன் கேஎல் ராகுலை தொடக்க வீரராகவும், 3ஆம் வரிசையில் விராட் கோலி,  4ஆம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் என கண்டிப்பாக டாப் 4ஆல் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக்கை  தேர்வு செய்துள்ள சோப்ரா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் தேர்வு செய்யவில்லை. 

ஸ்பின்னர்களாக அஸ்வின், ஜடேஜா, சாஹல் ஆகிய மூவரையும், வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோருடன் 23 வயது இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங்கையும் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை