இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Mon, Dec 19 2022 22:21 IST
Aakash Chopra on SRH's kitty in IPL 2023 auction (Image Source: Google)

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.

மேலும் தங்களது அணியில் எந்த வீரர்களெல்லாம் தேவைப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் தட்டி தூக்குவதற்கு பக்காவான ஸ்கெட்ச்சை ரெடி செய்து கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு அணிக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான முழு ஏலம் குறித்தும், அதில் எந்த வீரர் அதிகப்படியான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பது போன்ற கருத்தையும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

அந்த வகையில்,கேன் வில்லியம்சன் உட்பட முக்கியமான சில வீரர்களை விடுவித்து அதிக தொகையை பெற்றிருக்கும் (42.25 கோடி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கையில் இருக்கும் பணத்தை வைத்து தேவையான வீரர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்துள்ளார்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் அணி பென்ஸ்டோக்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய இரண்டு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை கிரீன் கிடைக்கவில்லை என்றால் சாம் கரணை எப்படியாவது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஹைதராபாத் அணியிடம் அதிக பணம் உள்ளது,ஆனால் அவர்கள் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். 

குறிப்பாக கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ரஷீத் கானை விடுவித்து விட்டதால் ஹைதராபாத் அணிக்கு சுழற் பந்துவீச்சாளர் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கந்தர் ராஜா அல்லது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான அமித் மிஸ்ரா மற்றும் பியூஸ் சாவுலாவை அணியில் இணைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா ஹைதராபாத் அணிக்கு அறிவுரை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்த வீரர்கள்: ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, ஏய்டன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்,டி. நடராஜன்,கார்த்திக் தியாகி, ஃபசல்ஹக் பரூகி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை