ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Fri, Mar 15 2024 20:35 IST
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

அதன்படி ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், கிளென் பிலீப்ஸ், புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்கோ ஜான்சென், வாஷிங்டன் சுந்தர், வநிந்து ஹசரங்கா போன்ற மேட்ச் வின்னர்களைக் கொண்டுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் எவ்வாறு செயல்படும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  ஆனாலும் அந்த அணியில் அதிரடியாக விளையாடும் வெளிநாட்டு வீரர்களில் எந்தெந்தெ வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. 

ஏனெனில் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அணியும் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த நான்கு வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா மூன்றாம் இடத்தில் மயங்க் அகர்வாலை தேர்வுசெய்துள்ளார். அதனைத்தொடர்ந்து ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சென், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். 

அதுவிர்த்து கடைசி பந்துவீச்சாளர் தேர்வாக ஜெய்தேவ் உனாத்கட், உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக நட்சத்திர வீரர்கள் முன்னாள் கேப்டன் ஐடன் மார்க்ரம், வநிந்து ஹசரங்கா, கிளென் பிலீப்ஸ் ஆகியோர் அகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ரம் அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, ஜெய்தேவ் உனட்கட், ஆகாஷ் மஹராஜ் சிங், ஜாதவேத் சுப்ரமணியம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை