ஷார்ஜா மைதானத்தின் தன்மை குறித்து ஆகாஷ் சோப்ராவின் கருத்து!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் அட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகல் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்து பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் பேட்டிங்கிற்கு பெயர்போன ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், நேற்றையப் போட்டியின் போது பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் ஆர்சிபி அணி தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதியில் ரன்களைக் குவிக்க தடுமாறியது.
இதன் காரணமாக சிஎஸ்கே அணியுடனான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூ செயலியில் பதிவிட்டுள்ள பதிவில், “ஷார்ஜா மைதானம் சற்று கவலையளிக்கிறது . ஏனெனில் போட்டி ஆரம்பித்த சிறுதுநேரத்தில் மைதானத்தின் தன்மை மாறத்தொடங்கிறது. அதிலும் நேற்றையப் போட்டியில் முற்றிலும் அதிக திருப்பத்தைக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஷார்ஜா இனி அதிக ரன்களை குவிக்கும் மைதானமாக இருக்காது. மேலும் வெற்றிபெற சுழற்பந்துவீச்சாளர்கள் உதவுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.