அணியில் இருக்கும் மற்றவர்களுக்கு எப்போது சான்ஸ் கிடைக்கும்? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!

Updated: Sat, Nov 20 2021 16:34 IST
Aakash Chopra questions India team selection in New Zealand T20Is (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இளம் வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், முதல் 2 போட்டிகளிலும் ஆடினார். 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமானார்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டியிலாவது, ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, “சாஹல், ஆவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய வீரர்களுக்கு 3ஆவது டி20யில் இடம் கிடைக்குமா? இதற்கடுத்த டி20 தொடர் ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகத்தான். இதிலிருந்து எத்தனை இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்?” என்று  கேள்வியெழுப்பியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை