ஐபிஎல் 2022: கேகேஆருக்கு பெரும் பின்னடைவு!

Updated: Wed, Mar 23 2022 16:34 IST
Image Source: Google

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மும்பை வான்கடேவில் நடைபெறும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 முடிவுகள் தற்போது இருந்தே எடுக்கப்பட்டு வருகின்றன

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக பார்க்கப்பட்ட டுவைன் பிரிட்டோரியஸ் வருவதற்கு தாமதமாகுமாம். இது ஒறு புறம் இருக்க, அணியின் தூணாக இருந்த மொயீன் அலியும் விசா பிரச்சினையால் வரவில்லை. இதனால் கொல்கத்தா அணியை எப்படி சமாளிப்பது என்ற கவலை சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது.

இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கொல்கத்தா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் மற்றும் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொல்கத்தா அணியின் முதல் 5 போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் தற்போது அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வாட்டி எடுத்துவிட்டார். அவர் மட்டும் இருந்தால், சிஎஸ்கேவின் டாப் ஆர்டருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, பிஞ்ச் இல்லையென்றால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பலவீனமாகும். தற்போது ஃபார்மில் இல்லாத ரகானே தான் ஓப்பனிங் ஆடுவார் என்பது சிஎஸ்கேவுக்கு அட்வாண்டேஜாக இருக்கலாம்.

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த தொடர் வரும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று தான் முடிவடைகிறது. இதில் பங்கேற்றுள்ள கம்மின்ஸ் மற்றும் ஃபிஞ்ச் ஆகியோர் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துவிட்டு, கொல்கத்தா அணியில் இணைய ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் ஆகலாம். அதற்குள்ளாக அந்த அணி 5 லீக் போட்டிகளில் விளையாடிவிடும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை