Aaron finch
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு யூ எஸ் மாஸ்டர் லீ கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் - கலிஃபோர்னியா நைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூஜெர்ஸி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கலிஃபோர்னியா அணியில் ஜேக்ஸ் காலிஸ் 7 ரன்களிலும், மிலிந்த் குமார் 27 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒரு பக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.