அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஏபிடி ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Fri, Nov 19 2021 13:16 IST
AB De Villiers Announces Retirement From All Formats Of Cricket (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்டில் ‘மிஸ்டர் 360’ என்ற புகழுக்கு சொந்தகாரருமானவர் ஏபிடி வில்லியர்ஸ். 

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதைத்தொடர்ந்து ஐபிஎல், பிக் பேஷ் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் மட்டும் வில்லியர்ஸ் பங்கேற்று வந்தார். 

இந்நிலையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபிடி வில்லியர்ஸ் இன்று அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் இந்த விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை” என்று பதிவிட்டு, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,டெல்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 5162 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மூன்று சதம், 40 அரைசதம், 251 சிக்சர்களும் அடங்கும். 

 

Also Read: T20 World Cup 2021

ஏபிடியின் ஓய்வு குறித்து பதிவிட்டுள்ள ஆர்சிபி அணி, “ஒரு சகாப்தத்தின் முடிவு! உங்களைப் போல் யாரும் இல்லை, ஏபி. ஆர்சிபியில் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். அணிக்கும், ரசிகர்களுக்கும், பொதுவாக கிரிக்கெட் பிரியர்களுக்கும் நீங்கள் செய்து கொடுத்த அனைத்திற்கும், நன்றி ஏபிடி. இனிய ஓய்வுநாள், ஜாம்பவான்” என்று பதிவிட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை