ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் எந்த அணியிலும் எந்த பொறுப்பிலும் சேர யாரிடமும் பேசவில்லை - எபிடி வில்லியர்ஸ்!

Updated: Sat, Aug 19 2023 14:49 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது ஆர்சிபி தான். ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ஆர்சிபி ரசிகர்கள் தங்களுடைய அணி வீரர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள்.

இந்த நிலையில் ஆர் சி பி அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் விளையாடிய டிவிலியர்ஸ் 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் 37 அரை சதங்களும் அடங்கும். ஆர்சிபி-யின் லெஜெண்டாக டிவில்லியர்ஸ் இருக்கிறார். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதனால் டிவிலியர்ஸ் ஆர்சிபி அணியின் மென்டராக வரப் போகிறார் என செய்திகள் உலா வந்தது.

எனினும் இது குறித்து தற்போது டிவில்லியஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, “தம் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் எந்த அணியிலும் எந்த பொறுப்பிலும் சேர யாரிடமும் பேசவில்லை. ஆனால் எனக்கு விருப்பம் இருக்கிறது. அதற்காக நான் இன்னும் தயாராகவில்லை. என் மனசுக்கு தெரியும் ,நான் எப்போதுமே ஆர்சிபி பையன் தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் எந்த அணியிலும் சேர்ந்து கொள்ள விரும்பவில்லை.

நான் கிரிக்கெட்டில் இருந்து தற்போது தான் ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்று சில காலம் ஆகி இருந்தாலும் என் மனதில் அது இப்போது நடந்தது போல் தான் தெரிகிறது. என் வாழ்க்கையில் பாதி நாட்களுக்கு மேல் அணி ஹோட்டலில் இருந்தும் அணியின் பேருந்தில் சென்றும் கழித்து விட்டேன் அதனால் மீண்டும் ஒரு முறை அதே சூழலுக்கு செல்ல நான் தயாராகவில்லை.

20 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடி விட்டேன். தற்போது என்னுடைய குறிக்கோள் வேறு மாதிரி இருக்கிறது. நான் மீண்டும் அணி வீரர்களோடு பேருந்தில் பயணம் செய்யும் சூழலுக்கு திரும்ப முயற்சி செய்வேன். ஆனால் அதற்கு ஒரு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். ஏன் ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் கிரிக்கெட் மீதான அன்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. இதனால் நிச்சயமாக நான் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு ரோலில் எதிர்காலத்தில் இணைவேன்” என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை