இந்திய ஏ அணி அறிவிப்பு: பிரித்வி ஷா, இந்திரஜித்துக்கு வாய்ப்பு மறுப்பு; ஈஸ்வரனுக்கு கேப்டன் பொறுப்பு!

Updated: Thu, Nov 24 2022 12:45 IST
Abhimanyu Easwaran to lead India A in four-day games against Bangladesh A (Image Source: Google)

இந்திய அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக வரும் 25, 27, 30 ஆகிய தேதிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றப் பிறகு, வங்கதேசத்திற்கு எதிரான சுற்றுப் பயணத்தில் பங்கேற்க உள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4,7,10 ஆகிய தேதிகளிலும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-18, 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தொடர்களில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த‍ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் பயிற்சி டெஸ்ட் நவம்பர் 4இல் தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி நிறைவுபெறுகிறது. அடுத்த டெஸ்ட் டிசம்பர் 6 முதல் 9ஆம் தேதிவரை நடைபெறும். இந்த பயிற்சி டெஸ்டில் கூட இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் பாபா இந்திரஜித் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

முதல் பயிற்சி டெஸ்டிற்கான அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), ரோஹன் குன்னும்மள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, அதித் ஷெத்.

2ஆவது பயிற்சி டெஸ்டிற்கான அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), ரோஹன் குன்னும்மாள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, அதித் ஷெத், சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், கேஎஸ் பாரத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை