சஞ்சு சாம்சனுக்கு கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் - அபிஷேக் நாயர்!

Updated: Mon, Aug 14 2023 22:48 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மிக இலகுவாக கைப்பற்றிய இந்திய அணியால், டி20 தொடரில் விண்டீஸ் அணியை இந்திய அணியால் இலகுவாக சமாளிக்கவே முடியாவில்லை. விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஐந்தாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரையும் இழந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி பேட்டிங்கிலும் சரியாக செயல்படாமல் வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரண் மற்றும் பிராண்டன் கிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுக்கவே 18ஆவது ஓவரிலேயே அசால்டாக இலக்கை எட்டிய விண்டீஸ் அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான தொடரை வென்றது.

டி20 தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து தனது வாய்ப்புகளை வீணடித்து வரும் சஞ்சு சாம்சனுக்கு இனி இந்திய அணியில் இடம் கொடுக்க கூடாது என பேசி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான அபிஷேக் நாயர், சஞ்சு சாம்சனுக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அபிஷேக் நாயர் பேசுகையில், “சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்படும் என கருதுகிறேன். அவருக்கு கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் சஞ்சு சாம்சன் 3ஆவது இடத்தில் களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன், 3ஆவது வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தும் ஒருவரை 6ஆவது இடத்தில் களமிறக்கி பரிசோதிப்பது ஏற்புடையது அல்ல. 

6ஆவது இடத்தில் அவர் வெறும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பார், இது அவருக்கு புதிய இடம். எனவே இதை வைத்து சஞ்சு சாம்சனின் திறமையை முடிவு செய்ய கூடாது. சஞ்சு சாம்சன் திறமையான வீரர், அவரது திறமையை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை