ரஞ்சி கோப்பை: குஜராத்தை வீழ்த்தி விதர்பா சாதனை வெற்றி!

Updated: Thu, Jan 19 2023 20:15 IST
Aditya Sarwate shines as Vidarbha set new tournament record! (Image Source: Google)

ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாக்பூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய விதர்பா அணி வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியில் கஜா மற்றும் தேஜாஸ் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஆர்யா தேசாய் அபாரமாக பேட்டிங் ஆடி 88 ரன்கள் அடித்து 12 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மேராய் 40 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 256 ரன்கள் அடித்தது. 

182 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் அடித்தார். அதர்வா டைட் 44 ரன்களும், பின்வரிசையில் பூடே 42 ரன்களும் அடிக்க, 2ஆவது இன்னிங்ஸில் 254 ரன்கள் அடித்தது விதர்பா அணி.

இதனால் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 72 ரன்களை மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 73 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய குஜராத் அணி, வெறும் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இது விதர்பா அணிக்கு சாதனை வெற்றி. ரஞ்சி கோப்பை வரலாற்றில் கடைசி இன்னிங்ஸில் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தப்பட்ட குறைவான இலக்கு இதுதான். குறைவான ஸ்கோரை அடிக்கவிடாமல் கடைசி இன்னிங்ஸில் எதிரணியை கட்டுப்படுத்தி விதர்பா அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை