ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: அபுதாபி நைட் ரைடர்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ஃப் ஜெயண்ட்ஸ், துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, நான்காம் இடத்தை பிடித்துள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அபுதாபி நைட் ரைடர்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ்
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
இப்போட்டி நடைபெறும் ஷேக் சயீத் மைதானம் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சமமான சராசரியைக் கொண்டுள்ளது. இதனால் இந்த மைதானத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அதிக ரன்களையும், விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 145 ரன்களை எடித்துள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 04
- அபுதாபி நைட் ரைடர்ஸ் - 01
- துபாய் கேப்பிட்டல் - 03
நேரலை
ஐஎல்டி20 தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஜீ குழுமம் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஜீ5 ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்
அபுதாபி நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், மைக்கேல் பெப்பர், ஜோ கிளார்க்(IP), அலிஷன் ஷரஃபு, லௌரி எவன்ஸ், இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், டேவிட் வின்னி, சாகர் கல்யாண், சுனில் நரைன் (கே), ஜோசுவா லிட்டில், அலி கான்.
துபாய் கேப்பிட்டல்ஸ்: டாம் பான்டன், மேக்ஸ் ஹோல்டன், லூயிஸ் டு ப்ளூய், சாம் பில்லிங்ஸ் (கே), சிக்கந்தர் ரஸா, பென் டன்க், தசுன் ஷனகா, ஸ்காட் குகெலிஜின், ஒல்லி ஸ்டோன், அகிஃப் ராஜா, ஹைதர் அலி, ஜாகீர் கான் (IP).
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - சாம் பில்லிங்ஸ், டாம் பான்டன், மைக்கேல் பெப்பர்
- பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய் (கேப்டன்), மேக்ஸ் ஹோல்டன், லு டு ப்ளூய், அலிஷன் ஷரஃபு
- ஆல்ரவுண்டர்கள் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), டேவிட் வில்லி, இமாத் வாசிம்
- பந்து வீச்சாளர் - ஹைதர் அலி.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.