ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Wed, Mar 06 2024 22:33 IST
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது. சமீபகாலமாக இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பல முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு மாலையில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • ஆஃப்கானிஸ்தான் - 16
  • அயர்லாந்து - 13
  • முடிவில்லை - 01

நேரலை

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அகில், நூர் அகமது, கைஸ் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத்

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அதிர், கிரெய்க் யங், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ்: ஆண்டி பல்பிர்னி, ஹாரி டெக்டர், பால் ஸ்டிர்லிங் , ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஸத்ரான் (துணைகேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: கர்டிஸ் கேம்பர், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: மார்க் அதிர், ஃபசல்ஹக் ஃபரூக்கி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை