ஆசிய கோப்பை 2022: முகமது நபி தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடர் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியின் கேப்டனாகவும் முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை முடித்த பிறகு, ஆசியக் கோப்பைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அந்த அணி புறப்படும்.
ஆசிய கோப்பை டி20 கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், ஹஸ்ரதுல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான், அப்சர் சஸாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஃபரித் அகமது மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் சத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான், சமியுல்லா ஷின்வாரி.
கூடுதல் வீரர்கள்: நிஜாத் மசூத், கைஸ் அஹ்மத், ஷரபுதீன் அஷ்ரஃப்.