தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஆஃப்கானிஸ்தான நி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய ஆஸ்கர் ஆஃப்கானும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அது, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டனாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியை வழிநடத்திய மகேந்திர சிங் தோனி 41 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததே, இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இச்சாதனையைப் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன் செய்து அசத்தியுள்ளார்.
மேலும் அதிக வெற்றிகளைப் பெற்ற டி20 கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஈயான் மோர்கன் 33 வெற்றிகளுடன் மூன்றாமிடத்திலும், பாகிஸ்தான் அணியின் சர்ஃப்ராஸ் அகமது 29 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.