ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் மகளிர் கிரிக்கெட்?
ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான்கள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாகியுள்ளது.
இந்நிலையில், தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தலிபான் செய்திதொடர்பாளர் வாசிக் கூறும்போது, "ஆஃப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்றார்.
இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தலிபான் தடை விதித்தால் ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்தது. இதற்கிடையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ட்விட்டர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்புகைப்படம் யாதெனில், இரண்டு சிறுமிகள் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிரிக்கெட் ஆஃப்கானிஸ்தானில் விளையாட்டாக அல்லது பொழுதுபோக்குக் கருவியாக மட்டுமல்லாமல், ஆஃப்கானிஸ்தானின் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் மற்றும் உந்துதலுக்கான ஆதாரமாகவும் செயல்படுகிறது, மேலும் நாட்டில் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளது.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தானில் கூடிய விரையில் மகளிர் கிரிக்கெட்டிற்கான அதரவு கிடைக்கும் என்ற கருத்துகள் இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.