ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்த்தனே நியமனம்!
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளும் ஆக்கிரமித்திருந்தனர். பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆஃப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படும் என அறிவித்தார். அதே போல தற்போதைய அதிபர் ஜோ பைடனும் வாக்குறுதி கொடுத்தார். இதனையடுத்து ஆஃப்கானில் இருந்து பெருவாரியான அமெரிக்கப்படைகள் வெளியேறிவிட்டன.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாலிபான் தீவிரவாத அமைப்பு, ஆஃப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. இதனால் அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தாண்டு அடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக அந்த அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியுடனான தொடரின் போது ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் அவிஷ்கா குணவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.