பர்மிங்ஹாம் லீக்கில் களமிறங்கும் மொயீன் அலி!

Updated: Sat, May 29 2021 16:44 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இவர் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்றாம் வரிசை வீரராக கலமிறங்கி அணியின் வெற்றிக்கு உதவினார். 

இந்நிலையில் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து, ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து இத்தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தனி விமானம் மூலம் தங்களது நாடுகளுக்கு திரும்பினர். 

இதற்கிடையில் மொயீன் அலி, இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான பர்மிங்ஹாம் லீக்கின் வெஸ்ட் பிரோம்விச் டார்ட் மவுத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் இந்த வாரயிறுதியில் வெஸ்ட் பிரோம்விச் டார்ட் மவுத் அணி, வால்சால் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் மொயீன் அலி நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::