சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - சுனில் கவாஸ்கர்!

Updated: Fri, Dec 09 2022 21:49 IST
Image Source: Google

இந்திய அணியின் இளம் வீரர் உம்ரான் மாலிக். ஐபிஎல் தொடரில் மிகவும் எளிதாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசியதால், உம்ரான் மாலிக் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட உம்ரான் மாலிக், இளம் வீரருக்கான மிடுக்கோடு பந்துவீசினார். இதனால் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் லைன் மற்றும் லெந்த் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உம்ரான் மாலிக் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் என்று அனைவருக்கும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் உம்ரான் மாலிக் குறித்து கவாஸ்கர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுனில் கவாஸ்கர் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரின் திறமையை அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளார். அவர் பொறுமையாக இருந்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு” என்று தெரிவித்தார்.

மூத்த வீரர்கள் உம்ரான் மாலிக்கை பாராட்டி வருவது இவர் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 23 வயதாகும் உம்ரான் மாலிக், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் அடையாளம் காணப்பட்ட இவர், இதுவரை 7 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் களத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை