ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்கியா ரஹானே!

Updated: Wed, May 07 2025 22:41 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது.

சிஎஸ்கே அணி தர்ப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஆன்ஷுல் கம்போஜ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அஜிங்கியா ரஹானே 48 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 5000 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த 9ஆவது வீரர் மெற்றும் 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணி தரப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், எம் எஸ் தோனி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதனைச் செய்துள்ளார். ரஹானே இதுவரை 197 போட்டிகளில் 182 இன்னிங்ஸில் விளையாடி 5017 ரன்களைச் சேர்த்துள்ளர். இதில் 2 சதம், 33 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நாராயண், மணீஷ் பாண்டே, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மொயின் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

இம்பேக்ட் வீரர்கள்: அன்ரிச் நோர்கியே, மயங்க் மார்கண்டே, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், லவ்னீத் சிசோடியா

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், எம்எஸ் தோனி (கேப்டன்), ஆர் அஷ்வின், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பத்திரனா

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள்: ஷிவம் துபே, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை