ஐபிஎல் தொடரில் மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் தொடங்கி சில தினங்களே ஆன நிலையில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே சிறப்பு மைல் கல் ஒன்றை எட்டும் வய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ரஹானே, 92 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 7000 ரன்களை அவர் பூர்த்தி செய்வார். இதன்மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த 12ஆவது வீரர் எனும் பெருமையையும் ரஹானே பெறவுள்ளார்.
அஜிங்கியா ரஹானே இதுவரை 272 டி20 போட்டிகளில் 256 இன்னிங்ஸ்களில் விளையாடி 29.27 சராசரியுடன் 6908 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களையும், 49 அரைசதங்களையும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே அரைசதம் கடந்தும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணைக்கேப்டன்),ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்.