மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!

Updated: Tue, Sep 24 2024 13:32 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

மேற்கொண்டு இத்தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடிவருகின்றன. அதேசமயம் சில அணிகள் தங்களுக்குள்ளாகவே பயிற்சியில் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி இத்தொடருகான நடுவர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த விருந்தா ரதி மற்றும் ஜிஎஸ் லட்சுமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு இந்த பட்டியலில் அனுபவ நடுவரான கிளாரி போலோசாக், கிம் காட்டன் மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு ஜிம்பாப்வேயின் சாரா தம்பனேவானா அறிமுக நடுவராக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கள நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கிம் காட்டன், சாரா தம்பனெவன, அன்னா ஹாரிஸ், நிமாலி பெரேரா, கிளாரி பொலோசக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், ஜாக்குலின் வில்லியம்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

போட்டி நடுவர்கள்: ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி, மிச்செல் பெரேரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை