SA vs IND: இந்தியா டாப் ஆர்டருக்கு ரபாடா தலைவலியாக இருப்பார்!

Updated: Wed, Dec 22 2021 13:23 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் ஆன இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பலருக்கும் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்கள் உள்ளன.

அதன்படி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நேற்று நிம்மதியான செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பவுலர் ஆன்ரிக் நோர்ட்ஜே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். எனினும் ஆபத்து இன்னும் குறையவில்லை. ரபாடா எனும் டேஞ்சர் பவுலர் சவாலாக உள்ளார்.

குறிப்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எதிராக ரபாடாவின் புள்ளிவிவரங்கள் அட்டகாசமாக உள்ளன. குறுகிய காலத்திலேயே விராட் கோலியை இதுவரை 7 முறை ரபாடா விக்கெட் எடுத்துள்ளார். அதுவும் தென் ஆப்பிரிக்க களம், பேட்டிங்கிற்கு கடினமானது என்பதால் கோலி அதிக சீண்டலுக்கு ஆளாவார் என தெரிகிறது.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி சறுக்கலை சந்தித்து வருகிறார். கடந்த 21 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை. 5 அரைசதங்கள் மட்டுமே வந்துள்ளன. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஒரு சதத்தை விளாசி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கோலியை போலவே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரபாடாவிடம் சிக்கியுள்ளனர். ரபாடாவிடம் கே.எல்.ராகுல் இதுவரை 2 முறை அவுட்டாகியுள்ளார். 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மயங்க் அகர்வால் 109 ரன்கள் அடித்து 3 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதே போல புஜாரா 2 முறை அவுட்டாகி 75 ரன்களை அடித்துள்ளார். இதனால் இந்த போட்டி கடினமாக இருக்கப் போகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை