ஐபிஎல் 2021: ஆரோன் ஃபின்ச் குறித்த சில சுவாரஸ்ய தகவல்!

Updated: Fri, Apr 23 2021 13:21 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டகாரருமானவர் ஆரோன் ஃபின்ச். இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்தின் போது எந்த அணியும் ஃபின்ச்சை  ஏலம் கேட்கவில்லை.

ஆனால், தொடக்க வீரரான ஆரோன் ஃபின்ச் ஐபிஎல் தொடரில் ஒரு முக்கியமான சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அது யாதெனில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அணிகளில் விளையாடிய முதல் வீரர் என்பதுதான்.

கடந்த 2011ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஆரோன் ஃபின்ச், பின்னர் 2012ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தமானார்.

இதைத்தொடர்ந்து அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியா அணிகளிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன்பின் 2015ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த ஃபின்ச், 2016, 17 ஆகிய ஆண்டுகளில் குஜராத் லையன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வானவேடிக்கை காட்டினார்.

பின்னர் குஜராத் லையன்ஸ் அணியின் ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து 2019ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தமானார். ஆனால் அந்த சீசனில் ஃபின்ச் சரிவர செயல்படாததால், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஃபின்ச்சை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்த செய்து தொடக்க வீரராக களமிறக்கியது.

இப்படி 10 ஐபிஎல் சீசன்களில் மட்டும் ஃபின்ச் 8 ஐபிஎல் அணிகளில் விளையாடி, ஐபிஎல் தொடரில் அதிக அணிகளில் விளையாடி வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை