NZ vs IND: ஒருநாள், டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Nov 15 2022 09:58 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25இல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்திய அணியின் ஹிருஷிகேஷ் கனிட்கர் (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்), முனிஷ் பாலி (பீல்டிங் பயிற்சியாளர்) மூவரும் நியூசிலாந்தில் லட்சுமணனுக்கு உதவுவார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்ட் டிரெண்ட் போல்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், மைக்கெல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, லோக்கி ஃபர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சவுதி, பிளெய்ர் டிக்னெர்.

நியூசிலாந்து ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சவுதி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை