கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!

Updated: Wed, Sep 11 2024 13:13 IST
Image Source: Google

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 56 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 34 ரன்களையும், பனுகா ராஜபக்ஷா 33 ரன்களையும் சேர்த்து உதவினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 187 ரன்களைக் குவித்திருந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ச் அணியில் ஜேசன் ராய், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வந்த பேரிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிக்காமல் இருந்த கீரன் பொல்லார்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 7 சிக்ஸர்களை விளாசி 52 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் நடுவரிடம் ஆவேசமாக நடந்துகொண்ட நிகழ்வானது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப் அந்த ஓவரில் 15 ரன்களைக்க் கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக வைட் பந்தின் மூலம் பவுண்டரியையும் கொடுத்தார்.

 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி அல்ஸாரி ஜோசப் அந்த ஓவரில் ஒரு பவுன்சரை வீச முடிவு செய்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் அந்த பவுன்சரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அது பேட்ஸ்மேனின் தலைக்கு மேல் சென்று கீப்பரையும் தாண்டி பவுண்டரியை தாண்டியது. இதனால் கள நடுவர் அந்த பந்தை வைட் என அறிவித்ததுடன், பவுண்டரியையும் வழங்கினார். இதனால் அதிருப்தியடைந்த அல்ஸாரி ஜோசப் கள நடுவரிடம் ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதை நீங்கள் கீழே காணலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை