இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் - கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை!
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோவ்மன் பாவெல் தலைமையில் களமிறங்கும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் டேரன் சமி தலைமியில் கோப்பையை கைப்பற்றி அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியால் அதன்பின் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதன் காரணமாக அந்த அணி இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடும் வாய்ப்பை இழந்து. எப்போதும் அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீப காலங்களில் பெரும் தோல்விகளைச் சந்தித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.
அதற்கேற்ற வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸல், ஷமார் ஜோசப், நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ் என அனுபவம் மற்றும் இளமை கலந்த அணியுடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆம்ரோஸ், “இம்முறை எங்களிடம் மிக மிக நல்ல அணி உள்ளது. நாங்கள் பேசும்போது, அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு முகாமில் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் சீரான மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாரான கிரிக்கெட்டை விளையாடியனால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.
இது எளிதானது அல்ல என்று தெரியும். ஆனல் இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம். எனவே இம்முறை அதனை நாங்கள் மூன்வது கோப்பையாக மாற்ற முயற்சிப்போம். மேலும் டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஏனவே நாங்கள் சிறப்பாக செயப்பட்டு தனை மற்ற முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.