Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Icc t20 world cup 2024

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
Image Source: Google

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!

By Bharathi Kannan April 23, 2024 • 14:42 PM View: 61

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலின் முதலிடம் வகித்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு ஒரு போட்டியில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் செயல்பாடுகள் இந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக உள்ளது. 

Related Cricket News on Icc t20 world cup 2024