மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தா நிலையில், அடுத்து களமிறங்கிய முன்னணி வீராங்கனைகள் அனைவரும் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்ட்களை இழந்து பெவிலியானுக்கு நடையைக் கட்டினர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர், ரோஸ்மெரி மெய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இபோட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய அமெலியா கெர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்றார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அமெலியா கெர் பேட்டிங்கில் 43 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதுடன, சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் அமெலியா கெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
அந்தவகையில் அவர் நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முன்னாள் வீராங்கனை அனையா ஷ்ரப்சோல் மற்றும் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் மேகன் ஷாட் ஆகியோர் தலா 13 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது அமெலியா கெர் முறியடித்து அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற வீராங்கனைகள்
- 15* - அமெலியா கெர் (நியூசிலாந்து) 2024
- 13 - அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து) 2014
- 13 - மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) 2020
- 12 - நோன்குலுலேகோ ம்லாபா (தென் ஆப்பிரிக்கா) 2024
- 11 - ஜூலி ஹண்டர் (ஆஸ்திரேலியா) 2012
- 11 - சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) 2023.