லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Wed, Jun 01 2022 21:35 IST
Anderson & Broad Return To English Team For First Test Against New Zealand; See Full Playing XI Here
Image Source: Google

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தொடர்களில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இந்த ஆட்டத்தில் ஒருசேர விளையாடவுள்ளனர். 

இதுதவிர அறிமுக வேகப்பந்துவீச்சாளராக மேத்யூ பாட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஸாக் கிரௌலி, ஒல்லி போப் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து அணி: ஸாக் கிரௌலி, அலெக்ஸ் லீஸ், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜேக் லீச், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து கேப்டனாக பென் ஸ்டோக்ஸும், தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லமும் பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் ஆட்டம் இது என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை