உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!

Updated: Sun, Dec 10 2023 21:19 IST
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் நோக்கில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் டி20 தொடருக்கு வலுவான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதில் கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல், 2 வருடங்களுக்கு மீண்டும் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிரடி வீரர்களான கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் மூன்று வீரர்களும் ஒருநாள் தொடரில் விளையாடாத நிலையில் டி20 அணிக்குள் இடம்பிடித்துள்ளனர். மேலும் நான்கு ஆண்டுகளாக டி20 அணியில் இடம்பெறாத ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் மேத்யூ ஃபோர்டு முதலிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஒருநாள் போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் துணை கேப்டனாகவும் இடம்பிடித்துள்ளனர். அதன்படி முதல் 3 டி20 போட்டிகளுக்கு இந்த அணி என்றும், பின்னர் அணியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும் என்றும் அணித்தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபான் ரூத்ரபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை