WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Wed, Jul 16 2025 23:09 IST
Image Source: Google

Australia T20 Squad: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விலகியுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுக வீரர்காள் மிட்செல் ஓவன், மேத்யூ குன்னமேன் உள்ளிட்டோருடன், காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்கள் ஜூவல் ஆண்ட்ரூ மற்றும் ஜெடியா பிளேட்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நட்சத்திர வீரர்கள் ஷிம்ரான் ஹெட்மையர், ஆண்ட்ரே ரஸல், பிராண்டன் கிங், அல்ஸாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்.

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.

Also Read: LIVE Cricket Score

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணை

  • முதல் டி20: ஜூலை 20 - சபினா பார்க், ஜமைக்கா
  • இரண்டாவது டி20: ஜூலை 22 - சபினா பார்க், ஜமைக்கா
  • மூன்றாவது டி20: ஜூலை 25 - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • நான்காவது டி20: ஜூலை 26 - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ஐந்தாவது டி20: ஜூலை 28 - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை