ஐபிஎல் 2022: மார்க் வுட்டிற்கு மாற்றாக தரமான வீரரை அணிக்குள் இழுத்த லக்னோ!

Updated: Wed, Mar 23 2022 21:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள சூழலில் பல அணிகளிலும் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய், மும்பை அணியில் இருந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் என அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினர்.

இதில் லக்னோ அணியின் நம்பிக்கை வீரராக இருந்த மார்க் வுட்-ம் வெளியேறுவதாக அறிவித்தார். வலதுகை முட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மார்க் வுட் அவதிப்பட்டு வருவதாகவும், குணமடைய சில காலம் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. அவரை நம்பி ரூ. 7.5 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. எனவே உடனடியாக அதே தொகைக்கு தகுதியுடைய ஒரு பவுலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது வுட்டிற்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த டஸ்கின் அகமது-ஐ ஒப்பந்தம் செய்யவுள்ளனர். இதற்காக டஸ்கினுடம் பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. வங்கதேச வாரியம் மற்றும் வீரரின் முடிவுக்காக மட்டுமே தற்போது லக்னோ அணி காத்துள்ளது என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டஸ்கின் அஹ்மத் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வழங்க மறுத்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இதனால் மார்க் வுட்டிற்கான சரியான மாற்றுவீரரை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டி 20 பந்துவீச்சாளரை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை லக்னோ அணி உறுதிசெய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி டி20 பந்துவீச்சாளரான ஆண்ட்ரூ டை, 32 சர்வதேச டி20 போட்டிகளில் 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை