ரிஷப் பந்த் ஆட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை - சஞ்சய் பங்கர்!

Updated: Sat, May 10 2025 14:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தாடுமாறி வருகிறார். இத்தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீர்ர்கள் ஏலத்தில் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரூ.27 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து ஏலம் எடுத்திருந்தது.

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையையும் பெற்றிருந்தார். மேற்கொண்டு அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. ஆனால் ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் மொத்தமாகவே 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ரிஷப் பந்த் வெள்ளை பந்து வடிவத்தில் தொடர்ந்து சொதப்புதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டு வடிவங்களிலும் ரிஷப் பந்த் ஆட்டத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவர் ஒரு அற்புதமான டெஸ்ட் பேட்டர் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட சீசனில், விக்கெட்டுக்குப் பின்னால் ஷாட்களை விளையாடுவதற்காக அவர் பல முறை முயற்சி செய்து விக்கெட்டை இழந்ததை நான் கவனித்தேன். ரிஷப் பந்தின் சிறந்த இன்னிங்ஸை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர் கவர்ஸிலும், இறங்கி வந்து சைட் ஸ்கீரினிலும், மிட் விக்கெட் மற்றும் ஸ்கோயர் திசைகளிலும் என ரன்களைச் சேர்த்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

ஆனால் இங்கே அவர் ரிவர்ஸ் ஸ்வீப்களையும் அல்லது மற்ற ஷாட்களை விளையாட முயற்சிக்கிறார், அவை மிகவும் நன்றாக இருக்கும். எனவே ஒரு பேட்டர்னாக, அவர் அந்த குழப்பத்தில் சிக்கி, தனது சிறந்த ஆட்டத்தையும், தரையில் அடிக்க விரும்பும் ஷாட்டையும் மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதேசமயம் நீங்கள் தரையோடு அடிக்கும் போது உங்களுக்கு ரன்களைச் சேர்க்க பல வழிகள் கிடைக்கும் என்பதையும் மறக்கக்கூடாது” என்று தெரிவிதுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை