கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்!

Updated: Fri, Oct 29 2021 17:37 IST
Image Source: Google

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த புனீத் ராஜ்குமார் இன்று மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோசமான உடல்நிலையுடன் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நடிகர் புனீத் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே போல கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அதன்படி இந்திய முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “புனீத் ராஜ்குமாரின் மரண செய்தி மனவேதனை அளிக்கிறது. அவரின் மறைவு இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு” என பதிவிட்டுள்ளார். 

மேலும் அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பதிவில்,“புனீத் ராஜ்குமாரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்திய சினிமா ஒரு முக்கிய நடிகரை இழந்துள்ளது. நான் பார்த்ததில் மிகவும் நல்ல மனிதர் அவர். மிகவும் எளிமையானவர். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மயாங்க் அகர்வால் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை