தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து டி காக் விடுவிப்பு; கோட்ஸி, ஸோர்ஸிக்கு இடம்!

Updated: Tue, Mar 26 2024 20:58 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். 

மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அத்போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. 

அதேபோல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெரால்ட் கோட்ஸி முதல் முறையாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். அவருடன், இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நந்த்ரே பர்கரும் இந்த ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் அத்தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டோனி டி ஸோர்ஸியும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

அவர்களுடன் நட்சத்திர வீரர்களான ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஸம்ஸி, காகிசோ ரபாடா ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் தொடர்கின்றனர். தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷப்னிம் இஸ்மாயில் மட்டும் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆடவர் அணி: டெம்பா பவுமா, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென்.

மகளிர் அணி: அன்னேக் போஷ்,டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளர்க், லாரா குடால், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, மரிசானே கப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், எல்லிஸ்-மாரி மார்க்ஸ், நோன்குலுலேகோ மலாபா, துமி செகுகுனே, க்ளோ டிரையன், டெல்மி டக்கர் மற்றும் லாரா வோல்வார்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை