சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!

Updated: Wed, Feb 21 2024 12:44 IST
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்பட்டு உலகளவில் பிரபலமடைந்த ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரைப் பின்பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் சொந்த டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் ஆஸ்திரேலியாவின் பிக் கேஷ், வெஸ்ட் இண்டீஸின் சிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல்டி20, இலங்கையின் எல்பிஎல், அமெரிக்காவின் மேஜர் லீக், வங்கதேசத்தின் பிபில் போன்ற தொடர்கள் உலகளவில் பிரபலமடைந்துள்ளன.

அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் சிபிஎல் என்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது 2013ஆம் ஆண்டு தொடங்கி 11 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 12ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி 12ஆவது சீசனுக்கான சிபிஎல் தொடரானது இந்தாண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 06ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தாம் 6 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது. 

இந்நிலையில் தான் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜமைக்கா தலாவாஸ் அணி கடந்த 2023 சீசனுடன் விலக்கிகொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த அணிக்கு பதிலாக ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் என்ற புதிய அணி உருவாக்கப்பட்டதுடன், நடப்பாண்டு சீசன் மூதல் அந்த அணி சிபிஎல் தொடரில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியின் உரிமையாளர்களாக இருந்த அதே நிறுவனம் தான் தற்போது புதிய அணியாக இடம்பிட்த்துள்ள ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியின் உரிமையாளராக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியின் உரிமையின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் அணிக்கான பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை