ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த அனுஜ் ராவத்; வைரலாகும் காணொளி!

Updated: Mon, Mar 25 2024 22:30 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முதல் கட்ட போட்டிகளிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.

இதில் 9 ரன்னில் பேர்ஸ்டோவ் நடையை கட்டினார். அதன்பின் வந்த பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்னிலும் தவான் 45 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண்- ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். யாஸ் தயால் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி சாம் கரண் 23 ரன்னில் வெளியேற அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மா 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணி விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் பிடித்த அபாரமான கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அதன்படி, இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் யாஷ் தயாள் வீசிய பவுன்சரை அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையுறையில் பட்டு நேராக விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சென்றார். இதனை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் லாவகமாக தாவியதுடன் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இக்காணொளி தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை