இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
சமீப காலங்களில் இந்திய அணி கிரிக்கெட் தொடர்களின் இடையே வீரர்களின் குடும்பத்தினரை ஹோட்டல் அறைக்கு அனுமதிக்கப்பதில்லை. எனினும், அனுஷ்கா சர்மாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பு அனுஷ்கா சர்மா உடல்நிலையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதால் விராட் கோலி, அணியில் இருந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவரை காண மும்பை சென்றார். அதன் பின், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் போது அவர் அகமதாபாத்துக்கு நேரில் வந்து போட்டியை கண்டார். அதன் பின் அவர் மும்பையில் நடந்த போட்டியை நேரில் காண வந்தார். பிற போட்டிகளை காண அனுஷ்கா சர்மா வரவில்லை.
இந்த நிலையில், நவம்பர் 12 தீபாவளி அன்று இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. அப்போது தன் கணவர் விராட் கோலியுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்த அனுஷ்கா சர்மா பெங்களூரில் இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றார். விராட் கோலி அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ற காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
நடப்பு 2023 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். அவர் 8 போட்டிகளில் ஆடி 543 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதம், நான்கு அரைசதம் அடித்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டிகளில் 50 சதம் அடித்து புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.