டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!

Updated: Tue, Dec 26 2023 19:43 IST
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்! (Image Source: Google)

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டும் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பாக்ஸிங் டே  தொடங்கி நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் டாஸ் வென்று பந்து வீசுவது என முடிவு செய்ய, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த முறையை மாற்றி அமைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடுகிறது. இது தென் ஆப்பிரிக்கா தரப்பில் பலத்தை விவாதத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக இந்திய வீரர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதுகாவலராக இருப்பது என்று பேசினால் போதாது. பேசுகின்ற படி நடந்து கொள்ளவும் வேண்டும். இப்போது இரண்டு டெஸ்டுகள் விளையாடினால் நாளை ஒரு டெஸ்ட்டும் விளையாடப்படும். இது சரியானது கிடையாது.

இந்தியா அணி ஆஸ்திரேலியா சென்றால் 5 போட்டிகள் விளையாடுகிறது. இதேபோல் இங்கிலாந்து சென்றால் 5 போட்டிகள் விளையாடுகிறது. ஆனால் மூன்றாவது பெரிய அணியான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் என குறைக்கிறோம். இது தென் ஆப்பிரிக்காவுக்கு அவமானம் செய்வதாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தீங்கு விளைவிக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட் தான் உன்னதமானது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று காட்டமாக விமர்சித்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை