மனைவியை விவாகரத்து செய்த ஷிகர் தவான்?
இந்திய அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் கடந்த மாதம் நடந்து முடிந்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தர்.
மேலும் இவர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனும் ஷிகர் தவானும் விவாகரத்து செய்துள்ளதாக அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
மெல்போர்ன் வாழ் இந்தியரான ஆயிஷா முகர்ஜி ஒரு குத்துச்சண்டி வீராங்கனையாவர். ஆயிஷா முகர்ஜியை கடந்த 2012ஆம் ஆண்டு ஷிகர் தவான் இரண்டாவது திருமணம் செய்ததுடன், முகர்ஜியின் இரண்டு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் திருமணமாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில், ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆயிஷா முகர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “வார்த்தைகள் எப்படி இவ்வளவு சக்திவாய்ந்த அர்த்தங்களையும் கொண்டிருக்கும் என்பது வேடிக்கையானது. விவாகரத்து பெற்றவராக இதை நான் முதலில் அனுபவித்தேன். முதல் முறையாக நான் விவாகரத்து செய்ய மிகவும் பயந்தேன். நான் தோல்வியடைந்ததாக உணர்ந்தேன், அந்த நேரத்தில் நான் ஏதோ தவறு செய்ததாக உணர்ந்தேன்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
நான் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது போல் என்னுடைய சுயநலத்தையும் உணர்ந்தேன். நான் என் பெற்றோரையும், குழந்தைகளையும் மிகப்பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளேன். விவாகரத்து என்பது மிகவும் மோசமான வார்த்தை” என்று பதிவிட்டுள்ளார்.