அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை பிரித்து மேய்ந்த பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Sat, Apr 22 2023 22:10 IST
Arjun Tendulkar Gave 31 Runs In One Over Against Punjab Kings Watch! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 31ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மேத்தியூ ஷார்ட் தடுமாற்றமாக செயல்பட்டு 11 ரன்களில் அவுட்டானலும் மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது அர்ஜுன் டெண்டுல்கரின் துல்லியமான யார்க்கர் பந்தல் அவுட்டாக்கினார்.

அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய அதர்வா டைட் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 10 ரன்களிலும் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்கள். அதனால் 83/4 என தடுமாறிய பஞ்சாப்பை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்கள். இருப்பினும் மும்பை பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்ததால் யாரை அடிக்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஜோடி 16ஆவது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கரை குறி வைத்தனர்.

ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் சிக்ஸர் பறக்க விட்டதால் தடுமாறிய அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்ததாக ஒய்ட் வீசினார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் பவுண்டரி அடித்த சாம் கரண் 3ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க 4ஆவது பந்தை எதிர்கொண்ட ஹர்ப்ரீத் சிங் தனது பங்கிற்கு பவுண்டரியையும் 5ஆவது பந்தில் சிக்ஸரையும் பறக்க விட்டார். 

இதனால் அழுத்தத்தில் அடுத்ததாக அர்ஜுன் வீசிய நோபால் பந்திலும் பவுண்டரி அடித்த அவர் ஃபிரீ ஹிட்டில் மீண்டும் பவுண்டரி அடித்தார். அந்த வகையில் அந்த முதல் 2 ஓவரில் 11 ரன்களை மட்டுமே கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் 3ஆவது ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் எடுத்தாலும் 48 ரன்களை கொடுத்ததால் ரோஹித் சர்மா கடைசி ஓவரை கொடுக்கவில்லை. 

இறுதியில் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/8 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த போட்டியில் உண்மையாகவே முதல் 10 ஓவரில் 83/4 என பஞ்சாப் தடுமாறிய போது அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்கள் வாரி வழங்கிய அந்த ஓவர் தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஏனெனில் அதன் பின் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்த பஞ்சாப் வெற்றிக்கு போராடும் அளவுக்கு பெரிய ஸ்கோரை குவித்து அசத்தியுள்ளது. முன்னதாக இந்த வருடம் அறிமுகமாகி இளம் வீரராக இருக்கும் அர்ஜுன் குறைந்த வேகத்தில் வீசியதால் நிச்சயமாக அடி வாங்குவார் என்று ரசிகர்கள் ஏற்கனவே தெரிவித்தனர். அதே போல இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய அவர் விரைவில் நல்ல முன்னேற்றத்தை கண்டால் மட்டுமே நீடித்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை