ஐபிஎல் தொடரானது இளம் வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது - அர்ஷ்தீப் சிங்!

Updated: Fri, Dec 22 2023 15:25 IST
ஐபிஎல் தொடரானது இளம் வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது - அர்ஷ்தீப் சிங்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த வெற்றிக்கு சதமடித்து உதவிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகவும் 3 போட்டிகளிலும் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அரஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் தம்மை போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அசத்த உதவுவதாக தொடர் நாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டி நடைபெற்ற பிட்ச்சில் இன்றைய நாள் முழுவதும் ஏதோ ஒன்று இருந்தது. அதில் சில நேரங்களில் பந்து நின்று வந்தது. விக்கெட் டூ விக்கெட் முறையில் பந்து வீசி எல்பிடபிள்யூ மற்றும் போல்ட் செய்வதே என்னுடைய எளிமையான திட்டமாகும். எங்களுக்கு ஐபிஎல் நல்ல அடித்தளமாக அமைந்துள்ளது. எங்களைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இடையே பெரிய தூரம் இல்லை.

ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களின் மன நிலைமையை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு உதவுகிறது. எங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம். வருங்காலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நாங்கள் எங்களுடைய அனைத்தையும் இந்திய அணிக்காக கொடுக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை