தென் ஆப்பிரிக்க டாப் ஆர்டரை காலி செய்த அர்ஷ்தீப் - காணொளி!

Updated: Sun, Oct 30 2022 18:51 IST
Image Source: Google

எட்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5ஆவது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன் எடுத்தார். 

இதைர்ஹ்தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், முதல் பந்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அதன்பின் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ரைலீ ரூஸோவ் சந்தித்த இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் தனது முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே கைப்பற்றி அசத்தினார்.

இதனால் இந்திய அணியைப் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறியுள்ளதால், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை